ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகை பிரியர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாத இறுதியில் அமெரிக்கா இந்தியாவுக்குத் தன்னுடைய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த நிலையில், தங்கத்தின் விலை குறைவே, சந்தையில் அசைவைக் கிளப்பியுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராமுக்கு ரூ.9,170 ஆகவும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,360 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 1ஆம் தேதி, 22 காரட் தங்கத்தின் விலை மேலும் ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,150 மற்றும் ஒரு சவரன் ரூ.73,200 ஆக விற்பனையாகி வருகிறது.

இதனுடன், 18 காரட் தங்கத்தின் விலையும் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,555 மற்றும் ஒரு சவரன் ரூ.60,440 ஆகும் நிலையில் விற்பனை நடைபெறுகிறது. இது ஆடை மற்றும் நகைத் தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து தற்போது ரூ.123 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,23,000 ஆகக் குறைந்துள்ளமை, பொன்-வெள்ளி சந்தையின் சுழற்சியை உறுதி செய்கிறது.