சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 24) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பவுன் ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்கப்பட்டது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைத்ததாலும், சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேலும், நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் காரணமாக உள்நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ரூ.160 உயர்ந்து ரூ.56,000 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கு விற்பனையாகிறது.