சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் நகை பிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாளுக்கு நாள் விலை உயரும் நிலையில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் நேரம் நெருங்கி வருகிறது.
நேற்று (அக்.14) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து ரூ.11,825 ஆக இருந்தது. அதேபோல் ஒரு சவரன் ரூ.94,600க்கு விற்பனையானது. இன்று (அக்.15) மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.11,860 ஆகவும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.94,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9,800 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் உயர்வை பதிவு செய்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.207, ஒரு கிலோ ரூ.2,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகை வியாபாரிகளுக்கு உற்சாகத்தையும், பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.