சென்னை : 22 காரட் தங்க ஆபரணத்தின் விலை பவுனுக்கு ரூ. 960 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,300-க்கு பவுன் ரூ. 600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.2,920, அதிகரித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.800 குறைந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1760 குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,080-க்கும், பவுன் ரூ.960 சரிந்து ஒரு பவுன் ரூ.56,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து கிராமுக்கு ரூ.98 ஆக உள்ளது.