ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த தங்கம் விலை, தற்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், அதன் பின்னர் நிலைக்கும் முன்னேற்றமோ, சரிவோ இல்லாமல் நுணுக்கமான மாற்றங்களுடன் ஜூலைக்கு வந்துள்ளது.

நேற்று ஜூலை 17-ம் தேதி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ₹9,105-க்கும், ஒரு சவரன் ₹72,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஜூலை 18-ல், கிராமுக்கு ₹5 உயர்ந்து, ஒரு கிராம் ₹9,110-க்கும், ஒரு சவரன் ₹72,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று, 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ₹5 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ₹7,505 என்றும், ஒரு சவரன் ₹60,040 என்றும் விற்பனை நடைபெறுகிறது.
வெள்ளி விலையும் இன்றைய தினம் சிறிய உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராமுக்கு ₹1 உயர்ந்து, ₹125 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ₹1,25,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.