சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமும் அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது ஒரு பவுன் அதிகபட்சமாக ரூ.59,000 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தங்கம் விலை குறைய தொடங்கியது.
கடந்த டிச., 25-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் பவுன் ரூ.57,440-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,260 ஆகவும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.58,080 ஆகவும் இருந்தது.
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு பவுண்டுக்கு ரூ. 1,180 அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதிகரித்து வருவதால் நகை வியாபாரிகள் கவலை அடையத் தொடங்கியுள்ளனர். இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ. 63,360-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.5 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம், 1 அதிகரித்து ரூ. 100-க்கு விற்கப்பட்டது. இதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 1,00,000 ஆக இருந்தது.