புதுடெல்லி: டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடியாக இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1.70 லட்சம் கோடியைத் தாண்டியது தொடர்ந்து பத்தாவது மாதமாகும்.
இதில், சிஜிஎஸ்டியின் பங்களிப்பு ரூ.32,836 கோடி, எஸ்ஜிஎஸ்டியின் பங்களிப்பு ரூ.40,499 கோடி, ஐஜிஎஸ்டியின் பங்களிப்பு ரூ.47,783 கோடி, செஸ் பங்களிப்பு ரூ.11,471 கோடி.
2023 டிசம்பரில் ரூ.1.65 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்ட நிலையில், 2024 டிசம்பரில் வசூல் 7.30 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால், நவம்பரில் ரூ.1.82 லட்சம் கோடி வசூலானது. ஒப்பிடுகையில், டிசம்பர் குறைவு. கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.