HDFC வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கான கட்டண மற்றும் பரிவர்த்தனை வரம்புகளில் முக்கியமான மாற்றங்களை 2025 ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் படி, மாதத்திற்கு வழங்கப்படும் இலவச பணப் பரிவர்த்தனையின் மொத்த வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சம் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பரிவர்த்தனைக்கு ரூ.1,000க்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, குறைந்தபட்ச கட்டணம் ரூ.150 ஆகும். மேலும், வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு இலவச பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள், அதற்குப் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 கட்டணம் விதிக்கப்படுகிறது.

மூன்றாம் தரப்பினருக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது. IMPS மற்றும் NEFT முறைகளில் செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ₹1,000 வரையிலான IMPS பரிவர்த்தனைகளுக்கு சாதாரண வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2.5, சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து ரூ.2.25 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ₹1 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ₹13.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
NEFT பரிவர்த்தனைகளில் ₹10,000 வரை ரூ.2, ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை ரூ.14, மேலும் ₹2 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு ரூ.24 கட்டணமாக வசூலிக்கப்படும். சீனியர் சிட்டிசன்களுக்கு இவை மேலும் குறைக்கப்பட்ட விகிதங்களில் வழங்கப்படுகின்றன. இவைகளுடன், செக் புக் வழங்கும் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு, இனிமேல் வருடத்திற்கு ஒரு இலவச செக் புக் மட்டும் வழங்கப்படும். இதில் 25 காசோலைகளுக்கு பதிலாக, இப்போது 10 காசோலைகளே வழங்கப்படும்.
மேலும் செக் புக் தேவையானால், ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.4 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்கு இந்த தகவல் மிக முக்கியமானது. செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் பேமெண்ட்கள், UPI, ஆன்லைன் சேவைகள் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படவேண்டும்.