அக்டோபர் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்கள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டுப் பணவீக்க விகிதம் 2024 அக்டோபர் மாதத்தில் (அக்டோபர், 2023-க்கு மேல்) 2.36% (தற்காலிகமானது) ஆக உள்ளது.
2024 அக்டோபரில் பணவீக்கம் முதன்மையாக உணவுப் பொருட்களின் விலை, உணவுப் பொருட்களின் உற்பத்தி, பிறவற்றின் உற்பத்தி, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் & அரை டிரெய்லர்கள் போன்றவற்றின் விலை உயர்வால் ஏற்பட்டது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் அனைத்துப் பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டெண் 154.4 ஆகவும், பணவீக்க விகிதம் 1.25 சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 154.6, ஆகவும் பணவீக்க விகிதம் 1.84 சதவீதமாகவும் இருந்தது. அக்டோபர் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 156.1 ஆகவும், பணவீக்க விகிதம் 2.36 சதவீதமாகவும் இருந்தது. முதன்மைப் பொருட்களைப் பொறுத்தவரை 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 195.1 ஆகவும் பணவீக்க விகிதம் 2.52 சதவீதமாகவும் இருந்தது.
செப்டம்பர் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 195.7 ஆகவும், பணவீக்க விகிதம் 6.59 சதவீதமாகவும் இருந்தது. அதேபோல, அக்டோபர் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 203.3 ஆகவும் பணவீக்க விகிதம்8.09 சதவீதமாகவும் இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பொறுத்தவரை 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 148.3 ஆகவும், பணவீக்க விகிதம் -0.54 சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பரில் மொத்த விலைக் குறியீட்டெண் 146.9 ஆகவும், பணவீக்க விகிதம் -4.05 சதவீதமாகவும் இருந்தது. அக்டோபரில் மொத்த விலைக் குறியீட்டெண் 146.5 ஆகவும் பணவீக்க விகிதம் -5.79 சதவீதமாகவும் பதிவானது.