சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை நீடித்து வந்த நிலையில், இன்று (செப்.19) ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.81,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.10,230க்கு விற்பனையாகிறது.
உலக நாடுகள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருவது மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நம் நாட்டிலும், குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பவுன் விலை ரூ.82,000க்கு மேல் சென்றது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக விலை குறைவாக இருந்தது. நேற்று (செப்.18) தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760க்கு விற்பனையாகியது. ஆனால், இன்று மீண்டும் உயர்வு கண்டுள்ளது.
இதனுடன், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து தற்போது ரூ.143க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஒரே நேரத்தில் அதிகரித்திருப்பது நகை ஆபரண பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.