சென்னை: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் கடைசி தேதி குறித்த குழப்பம் வரி செலுத்துவோரிடையே பரவி வந்தது. முதலில் இந்த ஆண்டிற்கான கடைசி தேதி ஜூலை 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் தேதி மீண்டும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

இதற்கு வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. “கடைசி தேதி இன்று (செப்டம்பர் 15) தான். அது எந்த வகையிலும் நீட்டிக்கப்படவில்லை. பரவும் செய்திகள் முற்றிலும் போலியானவை” என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோர் கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க உடனடியாக ரிட்டர்ன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் X தளப்பதிவிலும் இதே தகவல் வெளியிடப்பட்டுள்ளது. “ITR தாக்கல் செய்யும் கடைசி தேதி 31.07.2025 ஆக இருந்தது. பின்னர் அது 15.09.2025 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டது என பரவும் தகவல் உண்மையல்ல. கடைசி தேதி 15.09.2025 தான்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால், வருமான வரி செலுத்துவோர் போலி செய்திகளை நம்பாமல், உடனடியாக தங்கள் வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.