புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை சரிவு குறித்து, ஜெரோதா இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிதின் காமத் நேற்று கூறியதாவது:- சில்லறை முதலீட்டாளர்கள், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பங்குகளை தொடர்ந்து வாங்கி வருகின்றனர். ஆனால் இப்போது ஒரு பெரிய ஆபத்து உள்ளது. இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்படும் பெரிய வீழ்ச்சி, சில்லறை முதலீட்டாளர்களை பல ஆண்டுகளாக பங்குச் சந்தைகளில் இருந்து விலக்கி வைக்கும்.

2008-ல் பங்குச் சந்தை சரிவுக்குப் பிறகும் இதே நிலைதான் நிலவியது. 2008-ல் ஏற்பட்ட மந்தநிலையால் உலகப் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. மீண்டும் இதே நிலை ஏற்பட்டால் சில்லறை முதலீட்டாளர்கள் பல வருடங்கள் பங்குச் சந்தையில் இருந்து விலகி இருப்பார்கள். நிதின் கட்கரி கூறினார்.
2008-ம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் பொருளாதார மந்தநிலை காரணமாக மிக மோசமான ஆண்டு. இந்தியாவில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து, நீண்ட நாட்களாக பங்குச் சந்தையை அணுக முடியவில்லை.