நேற்று, வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடும் வீழ்ச்சியுடன் முடிவுற்றன. நிப்டி மற்றும் சென்செக்ஸ் தலா ஒரு சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.
சந்தை ஆரம்பத்தில் குறியீடுகள் சரிவுடன் துவங்கியதால், அதன் பின்விளைவாக முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர், இதனால் சந்தை மேலும் வீழ்ச்சியடைந்தது.
இந்திய பங்குச் சந்தையில் 673 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் இருந்தாலும், 3,297 நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன.