புதுடில்லி: இந்தியாவில் IPhone 16e மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு செல்போன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இந்தியாவில், IPhone 16e மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ் ஐடி, 6.1 இன்ச் OLED டிஸ்பிளே, ஏ18 சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் AI தொழில்நுட்ப வசதி இந்த மாடல் போனில் இடம்பெற்றுள்ளது.
இந்திய மதிப்பில் ₹59,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முன்பதிவு, பிப்.28 முதல் டெலிவரி தொடங்கும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.