சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 அதிகரித்து வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதையடுத்து, கடந்த மார்ச் 28-ம் தேதி, ஒரு பவுன் இதுவரை இல்லாத அளவு ரூ.50 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து, ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம், பவுனுக்கு, 2,080 ரூபாய் குறைந்துள்ளது.
அதன் பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக தீபாவளியன்று (அக் 31) இதுவரை இல்லாத அளவு ரூ.59,640ஐ எட்டியது. இதையடுத்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக சரிந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,285-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103-க்கு விற்பனையானது.