இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டின் போது புதிய வரி அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, வருடம் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே, முன்னதாக இருந்த ரூ.7 லட்சம் வருமான வரிவிலக்கு அளவையும் பின் பெறும் அளவு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுடன், மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50,000 முதல் ₹1,00,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாடகை சம்பாதிக்கும் மக்களுக்கு வரி தள்ளுபடி ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் புதிய வருமான வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ.24 லட்சம் மற்றும் அதற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரி, ₹20 லட்சம் முதல் ₹24 லட்சம் வரை 25%, ₹16 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை 20%, ₹12 லட்சம் முதல் ₹16 லட்சம் வரை 15% மற்றும் ₹4 லட்சம் முதல் ₹8 லட்சம் வரை 5% வரி விதிக்கப்படும். ₹4 லட்சம் வரை வரி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புதிய வரி முறையை பரிந்துரைத்த பட்ஜெட், நடுத்தர வர்க்கத்திற்கு மிகுந்த ஆதரவாக அமைந்துள்ளது.