பர்சனல் லோன் என்பது நெருக்கடியான நேரங்களில் உதவக்கூடிய ஒரு பயனுள்ள வசதி. ஆனால் இதை தவறான முறையில் நிர்வகித்தால், அது பெரிய பொருளாதார சிக்கல்களை உருவாக்கும். கடனை திருப்பிச் செலுத்த தவறுவதால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மருத்துவ அவசரங்கள், தொழில்நஷ்டம் அல்லது வேலை இழப்பு போன்ற காரணங்களால் சிலர் EMI செலுத்த முடியாமல் விடுகிறார்கள்
.இப்படிப்பட்ட சூழ்நிலையில் லோன் செட்டில்மென்ட் ஒரு தற்காலிக தீர்வாக அமையும்.லோன் செட்டில்மென்ட் என்பது முழு தொகையை செலுத்த முடியாத நிலையில், வங்கியுடன் பேசி ஒரு குறைந்த தொகையை செலுத்துவது. இது “செட்டில்டு” என குறிக்கப்பட்டாலும் “குளோஸ்டு” அல்ல.

எனவே இது கிரெடிட் ஸ்கோருக்கு எதிர்மறையாகவே பார்க்கப்படும். இது 50 முதல் 100 பாயின்ட் வரை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர்கால கடன்கள் பெறுவது கடினமாகலாம்.வங்கி லோன் செட்டில்மென்டை ஒப்புக்கொள்வதற்காக உங்கள் நிதி நிலைமை, வருமானம், செலவுகள் போன்றவை மதிப்பீடு செய்யப்படும். வங்கிகளுடன் பேசி ஏற்றுக்கொள்ளும் தொகையை எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தமாக பெற வேண்டும்.
இது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம். இந்த செட்டில்மென்ட் தொகைக்கு ரசீது அல்லது ஏதேனும் ஆதாரம் வைத்திருப்பது பாதுகாப்பானது.தடைப்படாத வழிகளின் முடிவில் மட்டுமே இந்த ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். வேலை இழப்பு, மெடிக்கல் அவசரங்கள் போன்ற முக்கிய சூழ்நிலையில் இது தேவையான முடிவாக இருக்கலாம். இருந்தாலும், இது உங்கள் நலனுக்கே எதிராக செயல்படலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, லோன் செட்டில்மென்ட் என்பது கடைசி வழியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு தீர்வாக இருக்க வேண்டும்.