போஸ்ட் ஆபிஸில் வழங்கப்படும் மாதாந்திர வருமான திட்டம் (MIS) சிறந்த நிதி மேலாண்மைக்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் நிலையான வருமானம் பெற முடியும்.
இந்த திட்டத்தை தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ தொடங்கலாம். எளிய முறையில், ரூ. 1000 முதலீடு செய்து கணக்கைத் துவங்கலாம். தனிநபரின் கணக்குக்கு ரூ. 9 லட்சம், கூட்டுக் கணக்கிற்கு ரூ. 15 லட்சம் வரை அதிகபட்ச முதலீடு செய்யலாம்.
5 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த முதலீட்டின் அடிப்படையில் மாதாந்திர வட்டி வழங்கப்படும். உதாரணமாக, ஒரு நபர் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ. 3,083 வருமானம் கிடைக்கும். அதே போல, ரூ. 9 லட்சம் முதலீடு செய்யும் போது, மாதம் ரூ. 5,550 வருமானம் கிடைக்கும். கூட்டுக் கணக்கில் ரூ. 15 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ. 9,250 வருமானம் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ், வரி சலுகைகள் மூலம் 80C பிரிவுக்குட்பட்ட வரி சலுகைகள் கிடைக்கும், மேலும், இது வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.