சொந்த வீடு என்பது பலருக்கான கனவாகவே உள்ளது. ஆனால் வங்கிக் கடன்களின் செயல்முறையும், கட்டணங்களும், வட்டி விகிதங்களும் பொதுமக்களுக்கு சுமையாகவே இருக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசு புதிய வீட்டுக் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம், குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புற மக்களுக்கு வீடு வாங்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. மத்திய அரசு 2028ஆம் ஆண்டுக்குள் ரூ. 60,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டு கடன்களுக்கு 3 முதல் 6.5 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை சுதந்திர தின உரையில் வெளியிட்டிருந்தார்.

மொத்தம் ரூ. 9 லட்சம் வரை கடனுக்கு மானியம் கிடைக்கும். இது மாத தவணை தொகையில் குறைவாகும். பயனாளிகளின் கடன் கணக்கில் நேரடியாக வட்டி மானியம் வரவு வைக்கப்படும்.தகுதியான பயனாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை, ரூ. 50 லட்சம் வரையிலான வீட்டு கடன் வழங்கப்படும். இத்திட்டம் நடைமுறையில் வந்தவுடன், வாடகை வீடுகளில் அல்லது சேரிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள்.
அரசே வீடு வாங்க ஊக்குவிக்கும் வகையில், இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.நகர்ப்புற வீட்டுவசதி தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. மானிய அளவுகள், தகுதி அளவுகோல்கள் ஆகியவை மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.
இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அடையும் நன்மை அதிகரிக்கலாம்.இந்தத் திட்டத்தின் மூலம், இலக்குகள் நோக்கி நகரும் குடும்பங்களுக்கு ஓர் நம்பிக்கையான வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. வீட்டுக்கு நிதி பிரச்சனை காரணமாக பின்தங்கியவர்களுக்காக இது ஒரு பெரும் ஒளிக்கீற்று எனக் கருதப்படுகிறது.