சென்னையில் இருந்து கிடைத்த தகவலின்படி, வருமான வரித் துறை கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பாக தவறான முறையில் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்தவர்களும் இதில் அடங்குவர்.

கடந்த சில வருடங்களாக தவறான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு (ஐடிஆர்) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் ஏற்கனவே தங்கள் கணக்குகளை தாக்கல் செய்து, வரி மீளளிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் இந்த ஆண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடு நிறைவடைகிறது.