ஒடிசா அரசு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஏழை மற்றும் எளியவர்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறது. அரசு அனைத்து இடங்களிலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
வயது மூத்தோர் மற்றும் 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடன் வாழும் நபர்களுக்கான ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் மாதம் ரூ.3,500 வரை ஓய்வூதியமாக பெற வாய்ப்பு உள்ளது. இந்த உயர்வால் தாத்தா பாட்டிகள் உள்ளிட்ட பலரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த திட்டம் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும், 80% அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடன் இருப்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். அனைத்து மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்களும் இத்தகவலை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் நியதி பட்நாயக் உத்தியோகபூர்வமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். தகுதி வாய்ந்த நபர்களின் விவரங்களை அட்டவணை – ஏ வடிவில் தயாரித்து விரைவில் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மரியாதையுடன் வாழ உதவும் என்றும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என்றும் அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி சமூக நலனுக்கான அர்ப்பணத்தை பிரதிபலிக்கிறது. இந்த அறிவிப்பை பலர் வரவேற்றுள்ளனர்.