தங்கம் வாங்க மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுவது அட்சய திருதியே. இந்த நாளில் தங்கம் வாங்குவது செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற நம்பிக்கையால், நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் தங்க நகைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கம் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6000 முதல் ரூ.7000 வரை இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் திடீரென ஒரு கிராமுக்கு ரூ.10,000 ஆக விலை உயர்ந்ததால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், இன்று (30.04.2025) அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை மாற்றமில்லையென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்திருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் தங்கம் வாங்கி வருகின்றனர்.
நேற்று 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.8980 மற்றும் சவரனுக்கு ரூ.71,840-க்கு விற்பனையான நிலையில், இன்று விலை ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.8975 மற்றும் ஒரு சவரன் ரூ.71,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.7435 மற்றும் சவரனுக்கு ரூ.59,480-ஆக இருந்தது. இன்று ஒரு ரூபாய் குறைந்து கிராமுக்கு ரூ.7434, சவரனுக்கு ரூ.59,472 ஆக மாற்றப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.109 மற்றும் ஒரு கிலோ ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு, அட்சய திருதி நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க விரும்பும் மக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.