சென்னை: வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.41 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. Indane, Bharat, Hindustan Petroleum (HP) போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இவற்றின் விலை மாற்றப்படுகிறது. இந்நிலையில் இன்று வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.41 குறைந்துள்ளது. புதிய விலையின்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 1,924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் ரூ. 1,762, மும்பையில் ரூ. 1,714.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 1,872. வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை. டெல்லியில் ரூ. 803, கொல்கத்தாவில் ரூ. 829, மும்பையில் ரூ. 802.50 ஆகவும், சென்னையில் ரூ. 818.50 என்றளவில் விற்பனையாகிறது.