சென்னையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், பலர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். வீடுகளில் தங்கத்தை சேமித்து வைக்கும் பழக்கம் அதிகரிக்கின்றது. ஆனால், வீட்டில் தங்கத்தை சேமிக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால், அதன் மீதான வரிகள் கட்ட வேண்டியிருக்கும்.

ஒருவரது திருமண நிலை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் தங்கம் சேமிப்பதில் விதிமுறைகள் வகுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்கலாம். இது 24 கேரட் தங்கமாக இருந்தால் அதற்கான பில் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்களுக்கு 100 கிராம் வரை அனுமதிக்கப்படுகிறது.
திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணமான ஆண்களுக்கு அனுமதிக்கப்படும் அளவு 100 கிராமாகும். இவை 24 கேரட் தங்கமாக இருந்தால், உரிய வாங்கிய பில் அவசியம்.
22 கேரட் தங்கமாக இருந்தால், பில்லின்றி பெண்கள் 500 கிராம் மற்றும் ஆண்கள் 250 கிராம் வரை வைத்திருக்கலாம். ஆனால் இதில் விதிகளை மீறினால், வருமான வரித்துறையின் கண்காணிப்பிற்குட்பட்டீர்கள். குறிப்பாக ஜிஎஸ்டி மற்றும் சொத்து வரிகளை வருடா வருடம் செலுத்த வேண்டியிருக்கும்.
தங்கம் வாங்கும் நேரத்தில், குறிப்பாக திருமணக் காலங்களில் மக்கள் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதனால் தங்க இறக்குமதியும் அதிகரிக்கிறது. இந்தியாவில் தங்க இருப்பு அதிகரிக்க, ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது.
சர்வதேச சந்தை மற்றும் வர்த்தக போர் ஆகியவை தங்கத்தின் விலை மீது தாக்கம் செலுத்துகின்றன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 3% உயர்ந்துள்ளது.
தற்போது சென்னையில் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ₹9,551, 22 கேரட் தங்கத்தின் விலை ₹8,755, மற்றும் 18 கேரட் தங்கத்தின் விலை ₹7,250 ஆக உள்ளது.
உலக சந்தையில் 1 அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) ஸ்பாட் தங்கத்தின் விலை $3,235 ஆகவும், அமெரிக்க தங்கத்தின் விலை $3,238 ஆகவும் உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ₹2.72 லட்சமாகிறது.
இதுவே வரலாற்றில் முதன்முறையாக அடைந்த உச்ச விலை. தினசரி தங்கம் சுமார் 0.3% முதல் 0.5% வரை உயர்வை காண்கிறது. அதே சமயம், டாலரின் மதிப்பு சுமார் 0.2% – 0.3% வரை குறைந்துள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹4,000 வரை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 அவுன்ஸ் தங்கம் தற்போது உள்ள விலையைவிட ₹17,000 அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வோர், வீடுகளில் தங்கம் சேமிப்போர், விதிமுறைகள் மற்றும் வரி விதிப்புகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.