வீட்டைக் விற்பதன் மூலம் வருமானம் ஈட்டும் போது, வருமான வரியைத் தவிர்க்க சில சட்ட ரீதியான வழிகள் உள்ளன. இந்திய வருமான வரி சட்டத்தின் பிரிவு 54 மற்றும் 54F மூலமாக, லட்சக்கணக்கான வரிகளைச் சேமிக்க முடியும். இவ்விரு பிரிவுகளும், விற்பனை லாபத்தில் வரி விலக்கு பெற உதவுகின்றன. பிரிவு 54ன் கீழ், குடியிருப்பு வீடுகளுக்கு மட்டும் இந்த நன்மை கிடைக்கும். நீங்கள் ஒரு வீடு அல்லது நிலத்தை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தினை இந்தியாவில் மற்றொரு குடியிருப்பு சொத்தில் முதலீடு செய்தால், வரி விதிக்கப்படாது.

புதிய வீடு வாங்க வேண்டிய காலம், விற்பனைக்குப் பிறகு 2 ஆண்டுகள் அல்லது கட்டுமானம் செய்ய வேண்டிய காலம் 3 ஆண்டுகள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. லாபம் ரூ.2 கோடிக்கு குறைவாக இருந்தால், இரண்டு வீடுகளில் முதலீடு செய்ய அனுமதி உள்ளது. ஆனால், புதிய வீடு 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் விற்கப்படுமானால், வரி விலக்கு ரத்து செய்யப்படும். புதிய வீடு ரூ.10 கோடியைத் தாண்டினால், அந்த அளவுக்கு மேற்பட்ட முதலீட்டிற்கு வரி விலக்கு கிடையாது.
பிரிவு 54Fன் கீழ், குடியிருப்பு அல்லாத சொத்தை விற்றால், முழு தொகையையும் குடியிருப்பு வீடுகளில் முதலீடு செய்தாலே வரி விலக்கு கிடைக்கும். விற்பனையின்போது, உங்கள் பெயரில் ஒரு வீடே இருக்க வேண்டும். முதலீட்டிற்குப் பிறகு, வேறு வீடு வாங்கக் கூடாது. விலக்கு விகிதாசார முறையில் கணக்கிடப்படும். அனைத்து ஆவணங்களும் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். முதலீட்டை உடனடியாகச் செய்ய முடியாவிட்டால், மூலதன ஆதாய வைப்பு கணக்கில் பணத்தைச் சேர்க்கலாம்.
இந்த நடைமுறைகள் வரி நிபுணரின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டமிட்ட முதலீட்டுகள் மூலம் வரி சுமையை குறைத்து, சட்டபூர்வமாக நன்மை பெற முடியும். எனவே, வீடு விற்கும் சூழலில், வருமான வரி சட்டத்தின் இந்த பிரிவுகளை சரியாகப் பயன்படுத்தினால், பெரிய அளவில் சேமிப்பு கிடைக்கும் என்பது உறுதி.