சென்னை: நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் திறன் மற்றும் வேலைவாய்ப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். வைத்யசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அடுத்த தலைமுறையினரின் கற்றல் விளைவுகளுடன் இந்தியாவின் இளைஞர்களை வளப்படுத்தும் முப்பரிமாண அணுகுமுறையாக திறன், வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான நிதியுதவி ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தகுதியான மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முறையான ஒதுக்கீடு மற்றும் செயலாக்கம் தருவது மாற்றத்துக்கான கொள்கையில் அதிகபட்ச பலன்களை அளிக்கும். எனவே, இதில் சரியான தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களை பங்குதாரர்களாக மாற்றுவது ஒரு முக்கியமான படி” என்றார்.