புதுடெல்லி: சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அதன்படி, நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 ஆக அதிகரித்துள்ளது. புதிய விலை இன்று அமலுக்கு வந்தது.
புதிய விலையின்படி, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் புதுடெல்லியில் ரூ.1,802-க்கும், மும்பையில் ரூ.1,754.50-க்கும், சென்னையில் ரூ.1,964.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,911.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும், வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.