
பணத்தை கையாளுவது என்பது கணக்கியல் உண்மைகளோ, நிபுணர்களின் ஆலோசனைகளோ மட்டும் அல்ல. நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் பழக்கங்கள் அதை நிர்ணயிக்கின்றன. ஒருவர் மாதம் 10,000 ரூபாய் சம்பாதித்தாலும், 10 லட்சம் சம்பாதித்தாலும், பணம் பற்றிய அடிப்படை உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே அது வாழ்வில் நன்மைகளை தரும்.
பணவிஷயத்தில் வெற்றி அல்லது தோல்வியை ஒரே முடிவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யக்கூடாது. ஒரே திறமையும் அதிர்ஷ்டமும் இணையும் போதுதான் வெற்றியாளராக முடியும். ஒரு சிறந்த முடிவு என்பது, பல சிறு தவறுகளையும், முயற்சிகளையும் தாண்டி கிடைக்கும் ஒன்று.

முதலீடு என்பது தினசரி ஏற்றத்தாழ்வை கவனிப்பதற்கானது அல்ல, அது நீண்டகால பார்வையில் செல்வத்தை உருவாக்குவது. பணம் சேமிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காரணம் தேவை இல்லை. எதிர்காலம் காணப்படாத ஒன்று என்பதால், சேமிப்பு நமக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் தருகிறது.
பணம் என்பது அதிகாரத்தின் வடிவம். நமக்கே உரிய வாழ்க்கை முறையை நாம் உருவாக்கும் வாய்ப்பு பணத்தின் வழியே வரும். அதிக பொருட்கள் வைத்திருப்பதே செல்வம் அல்ல, அமைதியும் சுதந்திரமும் செல்வத்தின் உண்மையான வடிவம்.
செல்வத்தை வளர்க்க விரும்பினால், நிச்சயமாக ரிஸ்க் எடுக்க வேண்டும். ஆனால், அதை நீண்ட காலம் பாதுகாக்க, பணிவு மற்றும் பொறுமை தேவை. வாரன் பஃபெட் பணக்காரராக மாறியதற்குப் பின்னணி ஒரு இரவு அல்ல, நீண்ட ஆண்டுகளுக்கான தொடர்ச்சியான முயற்சி தான்.
அதிக நேரம் முதலீட்டில் இருப்பது பெரும் பலனை தரும். முதலீட்டை விரைவாகத் தொடங்குங்கள், சிறிதளவாக இருந்தாலும் தொடருங்கள். உங்களுக்கு சரியாக பொருந்தும் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதையே பின்பற்றுங்கள்.
வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம் செலவுகளும் அதிகரிக்கும் என்ற மாறாத உண்மை உள்ளது. ஆனால் அதைக் கட்டுப்படுத்துவது உங்கள் புத்திசாலித்தனம். உங்கள் செலவுகளைத் தொடர்ந்து கண்காணியுங்கள்.
பிறர் வாழ்க்கை முறை, பொருளாதார திட்டங்கள் உங்களுக்குப் பொருந்தாது. உங்கள் வாழ்க்கை, இலக்கு, சூழ்நிலை தனித்துவமானவை. போதுமான அளவு என்ற மனநிலை வளர்ந்தாலே, எந்த அளவிலும் திருப்தியாக வாழலாம்.