தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.72,360-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, நேற்று தங்கத்தின் விலை அதிகரித்தது.

கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.9,045 ஆகவும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.72,360 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் தூய தங்கம் பவுனுக்கு ரூ.78,936 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்று மாறாமல் கிராமுக்கு ரூ.110 ஆக இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக இருந்தது.