புதுடில்லி: இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றும் நோக்கில், யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துக்கள் (@, #, %, &) இடம்பெற்றால் அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
தேசிய கட்டண கழகமான NPCI இந்த மாற்றங்களை அறிவித்துள்ளது. இது குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்று முதல் அந்த விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகின்றன.
இனி யுபிஐ ஐடிகள் ஆங்கில எழுத்துகள் (A-Z) மற்றும் எண்கள் (0-9) கொண்டிருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏன் செய்யப்பட்டுள்ளதென்பதை NPCI தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.