புதுடில்லி: ஜி.எஸ்.டி. விதிமீறல் மற்றும் ஏய்ப்பு தொடர்பாக மோசடியாக அனுப்பப்படும் நோட்டீஸ் குறித்து, வரி செலுத்துவோரை மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையில், மோசடி பேர்வழிகள் வரி செலுத்துவோருக்கு போலியான ஆவண அடையாள எண், அதாவது டி.ஐ.என்., பதிவிட்டு, அதிகாரப்பூர்வ லோகோவை அச்சடித்து, ஜி.எஸ்.டி. ஏய்ப்பு எனக் கூறி நோட்டீஸ் அனுப்புவதை புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
போலியான ஜி.எஸ்.டி. சம்மன்கள் மற்றும் ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குனரகத்துக்குள் எந்த தொடர்பும் இல்லை என மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த போலி நோட்டீஸ்களில், மோசடியான டி.ஐ.என். எண்கள் இடம் பெறுவதால், அதை அசல் என நம்பும் பொழுது வரி செலுத்துவோருக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது.
எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இது குறித்து வரி செலுத்துவோர் விழிப்புடன் இருக்குமாறும், முறையாக சரிபார்க்காமல் அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையான போலி சம்மன்களை பெறும்போது, அது போலி என தெரிந்ததும், சி.பி.ஐ.சி. இணையதளத்தில் சரிபார்த்து, புகார் அளித்தால், மோசடி பேர்வழிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
சரிபார்ப்பதற்கான வழிமுறை:
- சி.பி.ஐ.சி. இணையதளத்திற்கு செல்லவும்
- வெரிபை சி.பி.எஸ்.இ. – டி.ஐ.என்., டூல் என்ற பகுதியை தேர்வு செய்யவும்
- சம்மனில் குறிப்பிட்ட டி.ஐ.என்., எண்ணை பதிவிடவும்
- கேப்சா குறியீட்டை பதிவிட்டு, வெரிபை என்பதை தேர்வு செய்யவும்
- பின்னர், சப்மிட் என்பதை கிளிக் செய்து, சம்மனின் உண்மை தன்மையை அறியலாம்.
- டி.ஐ.என்., எண் பொருந்தாவிட்டால் அது போலி சம்மன் என்பதை உறுதிப்படுத்த முடியும்.