பான் கார்டு (PAN Card) என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவ அடையாள அட்டை. இதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, கையொப்பம், மற்றும் 10 இலக்க PAN எண் இடம்பெறும். அந்த எண் சுமார் எழுத்துக்களும் எண்களும் சேர்ந்து அமைந்திருக்கும்.

PAN எண்ணின் முதல் மூன்று எழுத்துக்கள் தானாகவே உருவாக்கப்படுகின்றன. ஆனால் நான்காவது எழுத்து மிகவும் முக்கியமானது. இது அந்த PAN எண் யாருக்காக வழங்கப்பட்டது என்பதை குறிப்பதாகும். உதாரணமாக, P என்றால் தனிநபருக்காக, C என்றால் நிறுவனத்திற்கு, T என்றால் அறக்கட்டளைக்கு, B என்றால் குழுவுக்கு, G என்றால் அரசாங்க அமைப்புக்கு, L என்றால் உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கும்.
அதேபோல், H என்றால் Hindu Undivided Family (HUF), A என்றால் Association of Persons (AOP) என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வரும் ஐந்தாவது எழுத்து, உங்கள் பெயரின் முதல் எழுத்தாக இருக்கும். அதாவது, உங்கள் பெயரின் முதல் எழுத்து PAN எண்ணிலும் இடம்பெறும்.
இதற்குப் பிறகு வரும் நான்கு எண்கள், சீரியல் எண்கள். கடைசியில் வரும் 10வது எழுத்து “Check Digit” எனப்படும். இது PAN எண்ணின் சரியான தன்மையை உறுதி செய்ய பயன்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான PAN எண் மட்டுமே இருக்கும். ஒருவரிடம் இரண்டு PAN எண்கள் இருந்தால், ஒன்றை ஒப்படைக்க வேண்டும். தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.