சென்னை: இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.
ரூ.50 கோடியே 79 லட்சத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.50 கோடியில் வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.
ரூ.1.84 கோடியில் 300 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
ரூ.2.50 கோடியில் திறந்தவெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும்.
ரூ.2.75 கோடியில், வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.