வெளிநாடு செல்லும் போது நீங்கள் எதிர்பாராத செலவுகளுக்கு தயாராக இருக்க வேண்டியிருக்கும். பணத்தை நிர்வகிப்பது ஒரு சவாலாக இருக்கும் போது, பாதுகாப்பாகவும் சுலபமாகவும் இருக்கும் வழி கிரெடிட் கார்டு ஆகும். இதற்காக பல வங்கிகள் வெளிநாட்டு பயணத்துக்கே உகந்த சலுகைகளுடன் கார்டுகளை வழங்குகின்றன.

பயணங்களுக்கே உருவாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் நீங்கள் ஹோட்டல், விமான டிக்கெட், ஷாப்பிங் உள்ளிட்ட செலவுகளில் கூடுதல் ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக் மற்றும் ஏர் மைல்ஸ் பெறலாம். மேலும், Visa, MasterCard, American Express போன்ற பிராண்டுகளால் வழங்கப்படும் கார்டுகள் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பண மாற்றச் சிக்கல்கள் மற்றும் திருட்டு அபாயங்களும் குறையும்.
அதோடு, சில கிரெடிட் கார்டுகள் சிறந்த பணப்பரிமாற்ற விகிதங்களை வழங்குகின்றன. சில விமான நிலைய ஸ்டோர்களில் கூட அதிக சலுகைகள் பெறலாம். பயணங்களில் டைனிங், ஷாப்பிங் போன்று வழக்கமான செலவுகளுக்கே கூட கிரெடிட் கார்டு மூலம் பயன்படுத்தும்போது கூடுதல் ரிவார்டுகள் கிடைக்கும்.
பயண காப்பீடு, மருத்துவ அவசர உதவி, லக்கேஜ் இழப்பு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் சில கார்டுகளில் வழங்கப்படுகின்றன. இவை தவிர, OTP, பையோமெட்ரிக் சோதனை, கார்டு இழப்பின் பின் செலவுக்கான பொறுப்புத் தவிர்ப்பு போன்ற பாதுகாப்பும் உண்டு. எனவே, வெளிநாடுகளுக்கு செல்லும் உங்கள் அடுத்த பயணத்துக்கு முன் உங்கள் கிரெடிட் கார்டில் இந்த வசதிகள் உள்ளனவா என்று சரிபார்த்து பயணிக்கலாம்.