குளச்சல்: குளச்சலில் நடுக்கடலில் விசைப்படகு மீது மோதிய சரக்குக்கப்பல் மூழ்கியதில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நடுக்கடலில் சரக்குக் கப்பல் மோதியதால் சேதமடைந்த விசைப்படகு மூழ்கிய நிலையில், கடலில் தத்தளித்த 11 மீனவர்களில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அழிக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் நங்கூரமிட்டு மீன்பிடிக்க தயாராகிக் கொண்டிருந்தபோது மோதிய சரக்குக்கப்பல் அவர்களை காப்பாற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கரையில் இருந்து மூன்று படகுகளில் சென்ற மீனவர்கள் மீட்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.