பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான வர்த்தக பரிவர்த்தனைகளில் டாலரை பொதுவான நாணயமாக பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்த நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு டாலருக்கு பதிலாக புதிய கரன்சிகளை பயன்படுத்துவது அல்லது பிரிக்ஸ் நாட்டிற்கு தனியான பொது நாணயத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ரஷ்யாவும், சீனாவும் இத்தகைய மாற்றத்தை வலியுறுத்தி வந்தாலும், இந்தியா இதற்கு முழு ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில், டாலருக்கு மாற்றாக எதையும் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்த நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.