சான்பிரான்சிஸ்கோ: ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், அந்நிறுவனத்தின் தீய நடைமுறைகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவருமான 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். இதை போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்கொலை மூலமே அவரது உயிர் பிரிந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என சான் பிரான்சிஸ்கோ போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.