சென்னை : மத்திய அரசும், கூகுள் இந்திய அதிகாரியும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எதற்காக தெரியுமா?
காக்கா முட்டை விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’.அஞ்சலி , ரம்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மூன்று பேர் பேட் கேர்ள் திரைப்பட டீசர் குழந்தைகளுக்கு எதிராகவும் சிறுமிகளை ஆபாசமாகக் காட்டுவதாகவும் கூறி யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி தனபால், மத்திய அரசு மற்றும் கூகுள் இந்தியா அதிகாரி டீசர் குறித்து பதிலளிக்க வேண்டுமென உத்தரவு அளித்து ஒருவாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்திருக்கிறார்.