தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் அனைத்து நிலங்களுக்குமான தகவல்களை கணினிமயமாக்கி, பொதுமக்கள் இணைய வழியில் அணுகக் கூடிய வகையில் https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால், பல சிட்டாக்களில், நில உரிமையாளராக இருந்த இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன. வாரிசுகளின் பெயர்களை சேர்க்க வேண்டிய தேவையும் உள்ளதாக அரசு உணர்ந்துள்ளது.

இந்நிலையில், பட்டா விவரங்களை நிகழ்நிலைப்படுத்த கீழ்க்கண்ட ஆவணங்களுடன் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்:
🔸 விண்ணப்பிக்கும் வழிகள்
- இ-சேவை மையங்கள் மூலமாக
- Citizen Portal (https://eservices.tn.gov.in/) வழியாக
🔸 தேவையான ஆவணங்கள்
- இறப்பு சான்றிதழ் – நில உரிமையாளராக இருந்தவரின்
- வாரிசு சான்றிதழ் – தலுக்கா அலுவலகத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்
- மற்ற வாரிசுகள் இறந்திருந்தால், அவர்களது இறப்புச் சான்று
- பட்டா மாறுதல் கோரும் நிலத்திற்கான வில்லங்க சான்றிதழ்
- பதிவு செய்யப்பட்ட ஆவண நகல் (பாகப்பிரிவினை, உயில் சாசனம், தான செட்டில்மென்ட்)
- கிரையம் பெற்றவர்கள் விண்ணப்பித்தால், மேலுள்ள ஆவணங்களுடன் கிரைய ஆவண நகல்
- நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விண்ணப்பிப்பின், உரிமை தீர்ப்பு நகல்
🔸 பயன்கள்
- சட்டப்பூர்வ உரிமையாளராக வாரிசின் பெயர் சேர்க்கப்படும்
- நில உரிமை தெளிவாக நிரூபிக்கப்படும்
- எதிர்கால சந்தா, விற்பனை மற்றும் வங்கிக் கடன்களில் சிக்கல் ஏற்படாது