‘உலகப் பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் 2025’ என்ற தலைப்பிலான ஐ.நா. அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் 6.90 சதவீதமாக மதிப்பிடப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2025 ஆம் ஆண்டில் 6.60 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இதேபோல், சேவைகள் மற்றும் சில உற்பத்திப் பொருட்களில் வலுவான ஏற்றுமதி வளர்ச்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று ஐ.நா. கூறியுள்ளது.
தொழில்துறை வளர்ச்சி 2024 நவம்பரில் 5.20 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான ரபி பருவத்திற்கான கோதுமை கொள்முதல் செய்வதற்கான அரசாங்கத்தின் இலக்கு 30 மில்லியன் டன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2024-25 ஆம் ஆண்டில், 26.6 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 26.2 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது. ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் 115 மில்லியன் டன் கோதுமை உற்பத்தியை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த முன்னேற்றங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் சூழ்நிலையை மேலும் வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.