சென்னை: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது ஒரு தனிப்பட்ட விவகாரத்தில் தலைப்புச் செய்தியாக உள்ளார். தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துள்ளார் என்றும், ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் சமூக வலைதளங்களில் அறிவித்தார். இது இணையத்தில் பெரும் விவாதத்திற்கிடையே, ரங்கராஜ் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் தனது முதல் மனைவியான ஸ்ருதியை விவாகரத்து செய்யவில்லை என்பது மேலும் எதிரொலிக்கிறது.

மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதியை ஏற்கனவே திருமணம் செய்தவர். ஸ்ருதி ஒரு வழக்கறிஞராகவும், ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் செயல்பட்டு வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது குடும்ப வாழ்க்கை எந்தக் குழப்பமும் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட புதிய உறவின் வெளிச்சத்தில், தற்போது ரங்கராஜ் இருவரிடமும் வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்காத நிலையில் உள்ளார். இது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
புதிதாக வெளியான புகைப்படங்களின் மூலம் ஜாய் மற்றும் ரங்கராஜ் திருமணமாகிவிட்டதாக தெரிவிக்க, அதே நேரத்தில் ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் #தற்காலிகஉறவுகள், #தீராதவிவாகங்கள், #விவாதநடிகர் போன்ற ஹேஷ்டேக்குகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவர்கள் வாழ்க்கையின் அடுத்த படி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்ற கேள்விக்கு, பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி அளித்த பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. “முதல் மனைவியின் விவாகரத்து இல்லாமல் இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது. கிரிஸில்டாவுக்கு மனைவி என்ற உரிமை கிடையாது. ஸ்ருதி விரும்பினால், ரங்கராஜ் மீது வழக்குத் தொடர முடியும்” எனக் கூறியுள்ளார்.