சென்னை: இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 28) முதல் 04.07.2024 வரை: தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிக பட்ச வெப்பநிலை நிலவுவதற்கான முன்னறிவிப்பு:- இன்று (ஜூன் 28) முதல் 02.07.2024 வரை:
அடுத்த ஐந்து நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பல இடங்களிலும், ஓரிரு இடங்களில் இயல்பை நெருங்கும். தமிழ்நாட்டில் உள்ள இடங்களில், இயல்பை விட 2° – 3° செல்சியஸ் குறைவாக இருக்கும். அதைவிட அதிகமாக இருக்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸாகவும் இருக்கும்.
இன்று (ஜூன், 28) முதல் 02.07.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.