பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட், 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 28ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் எந்தவொரு பணி அனுபவமும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.

தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய இங்கே சென்று பார்க்கலாம்