நடைபெற்ற நிருபர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், ”ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கியமான Operation Sindoor நடவடிக்கை தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். உலக நாடுகள் இந்தியாவின் ராணுவ வலிமையை இந்த நடவடிக்கையின் மூலம் உணர்ந்துள்ளன என்றும், இது மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சி என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூரின் நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து குறிக்கோள்களும் வெற்றிகரமாக முடிந்தன. குறுகிய 22 நிமிடங்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இது இந்திய ராணுவத்தின் துல்லியமும், திறமையும் உலகிற்கு ஒரு போதனையாக உள்ளது” என்றார். கூட்டத்தொடரின் அனைத்து அமர்வுகளும் சுமுகமாகவும், சிறப்பாகவும் அமைய வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மோடி தனது உரையில் தற்போதைய மழைக்காலத்தை ஒரு புதிய தொடக்கத்திற்கு ஏற்ற நேரமாகவே பார்க்க வேண்டும் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்றார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியக் கொடி பறப்பது பெருமைக்குரிய தருணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தையும், உலகளாவிய கௌரவத்தையும் நிரூபிக்கும் நிகழ்வாகும் என அவர் வலியுறுத்தினார்.
மழைக்கால கூட்டத் தொடர், ஆபரேஷன் சிந்தூர், பாதுகாப்பு குறித்து மத்திய அரசு விரிவாக பேச தயாராக உள்ளதாகவும், இதற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் தாக்கத்தை அதிகரிக்க காரணமான இந்த ராணுவ நடவடிக்கையை நாடாளுமன்றம் முழுமையாக பாராட்டும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.