சினிமா உலகம் தற்போது வேகமாக டிஜிட்டலை நோக்கி நகர்கிறது. டீசர், டிரெய்லர் மட்டுமின்றி, சிலர் போஸ்டர் வெளியான காட்சியிலிருந்தே முழு கதையை ஊகிக்கிறார்கள். அதையும் தாண்டி, தற்போது கூலி படத்தின் ஒரு காட்சி, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில், அவருக்கு ஜோடி எவரும் இல்லாதது தெரிந்ததும், ரசிகர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு டெலிட்டட் ஃபிளாஷ்பேக் காட்சி உருவாக்கியுள்ளனர்.

இந்த ஃபேன்மேட் வீடியோவில், ரஜினியின் மனைவியாக நடிகை ஷோபனா தோன்ற, ரஜினியின் சிறுவயது புகைப்படத்துடன் இணைத்து, கற்பனை மையமாய் கதை சொல்கிறது. அதனுடன், தளபதி படத்தின் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடலையும் பின்னணியில் சேர்த்துள்ளனர். ரசிகர்கள் இந்த வீடியோவை ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா சாதனையை கொண்டாடும் ஒரு சிறந்த கற்பனை மரியாதையாக பார்க்கின்றனர்.
இதேவேளை, கூலி படத்தில் சில காட்சிகள், குறிப்பாக சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர்கான் போன்ற கதாபாத்திரங்களை ரசிகர்கள் தீவிரமாக டீகோட் செய்து, பல்வேறு மீம்களாக மாற்றியுள்ளனர். இந்த ட்ரோல்களும் சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கின்றன. லோகேஷ் இந்த முறை கதை சொல்லி பல இடங்களில் தடுமாறியதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப திரைப்படம் அமைவில்லையெனவும் விமர்சனங்கள் வந்துள்ளன.
அத்துடன், ரஜினியின் ஃபிளாஷ்பேக் போர்ஷனை உண்மையிலேயே டீ-ஏஜிங் மூலம் எடுத்தாரா, ஏஐ உதவியோடு படைத்தாரா என்பது பற்றிய விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டிஸ்கஷனுக்குள், ரஜினிக்கு ஜோடி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என ஏஐ மூலம் உருவான காட்சிகள், புதிய கோணத்தில் ரசிகர்களை எண்ணிக்கையாக ஈர்த்துள்ளன.