இந்த குறிப்பு அரிசி பாசிப்பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து சமைக்கும் சத்தான கஞ்சி செய்முறையைப் பற்றி விளக்குகிறது. இந்த கஞ்சி மிக சுவையானது மற்றும் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
தேவையான பொருட்கள்:
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- இஞ்சி- சிறிதுபொடியாக அரிந்தது
- பச்சை மிளகாய்-4
- வெங்காயம்-3 அரிந்தது
- பூண்டு – 15 பற்கள் இடித்தது
- அரிசி-300கிராம்
- பாசிபருப்பு-150கிராம்
- சீரகம்-அரை டீ ஸ்பூன்
- உப்பு- தேவைக்கேற்ப
- தேங்காய் பால் – 3 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அரிசியை நன்கு அலசி கழுவிக் கொள்ளவும்.
- சிறிது எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய்,தக்காளி,இஞ்சி,பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்
- குக்கர் அல்லது பாத்திரத்தில் 1லிட்டர் தண்ணீர் மற்றும் அரிசி, பாசிப்பருப்பு,உப்பு சேர்க்கவும்.
- அடுப்பில் கொதிக்க வைக்கவும். குக்கரில் சமைக்கும் போது, முதல் விசில் வந்ததும் அடுப்பின் வேகத்தை குறைத்து 7-8 நிமிடங்கள் சமைக்கவும்.
- அல்லது பாத்திரத்தில் கொதிக்க வந்ததும் தீயை குறைத்து தேங்காய் பாலை சேர்க்கவும், 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
- இதை சைடிஷ்சாக புதினா துவையல் அல்லது கறிவேப்பிலை துவையல் பரிமாறலாம்.
இந்த கஞ்சி, சுவையும் சத்தும் நிறைந்துள்ளது, உடலுக்கு நன்மை தரும் உணவாகும்.