எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியை பராமரிப்பது எளிதான காரியம் இல்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா, வருத்தமாக இருக்க வேண்டுமா என்பதை நாமே தேர்வு செய்கிறோம்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில தவறான பழக்கங்களை கைவிட வேண்டும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவது உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவது மிக முக்கியம். அளவுக்கு அதிகமாக யோசிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கடந்த காலத்தை அத்துடன் முடித்து, தற்போதைய தருணத்தில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். கசப்பான அனுபவங்களை மனதில் வைத்திருப்பது உங்கள் மனநிலையை பாதிக்கும். மன்னிப்பு மற்றும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். சுயபேச்சை எதிர்மறையாக மாற்றுவது உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்களை அன்போடு நடத்துவது முக்கியம். அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சிப்பது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும். ஆரோக்கியமான வரம்புகளை அமைத்து உங்கள் தேவைகளை முன்னிலைப்படுத்துங்கள். விஷயங்களை தள்ளிப் போடுவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வேலைகளை உடனடியாக முடிக்கவும், சிறிய படிகளாக பிரித்து செய்வதற்கு பழகிக் கொள்ளவும்.
எதிர்மறையான உறவுகளை தொடர்வது மகிழ்ச்சியை குறைக்கும். உங்களை ஊக்குவிக்கும் நபர்களுடன் உறவுகளை உருவாக்குங்கள். பெர்ஃபெக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் தவறுகளை ஏற்றுக் கொண்டு, மற்றவர்களின் முன்னேற்றத்தை பாராட்டுங்கள். இந்த மாற்றங்களை செய்து, உங்கள் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சியை உருவாக்கலாம்.