சென்னை: தமிழ்நாடு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இன்று பட்ஜெட் தாக்குதல் செய்து விட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகைய திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை. மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பால் தமிழக அரசு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவில் முன்னோடி திட்டமாக உள்ளது, பிற மாநிலங்கள் பின்பற்றுவதுதான் இந்த திட்டத்தின் மிகப் பெரிய வெற்றி!மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 செலுத்தப்பட்டபோது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது. 3 மணி நேரத்திற்குள் 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தபோது நாடே திரும்பிப் பார்த்தது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.