வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
லூசியானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குடியேற்றத்துறை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் நாடு கடத்தல் விமானங்களின் காட்சிகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை தொடர்ந்து வெளியேற்றுவோம் என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக குடியேற்ற உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடும்பங்கள் பிரிக்கப்படுவது, சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் கடுமையான அணுகுமுறை தொடரும் என்பதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.
