உலக சந்தையில் அளவுக்கு அதிகமான உற்பத்தி மற்றும் சந்தையை பாதிக்கும் சமமற்ற கொள்கைகளை எதிர்கொள்ள இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 15 பொருளாதார நாடுகள் இணைந்து கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
உலக வர்த்தகத்தில் சமநிலையை ஏற்படுத்தவும், தொழில்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
